இலங்கை – பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 38 ஆவது போட்டி இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அத்துடன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய 02 அணிகளும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 4 முறை மோதியுள்ளன.
இதில் இலங்கை அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்