திருகோணமலையில் விபத்து : விபத்தை ஏற்படுத்தியது அரசியல்வாதியா?

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி கிளிவெட்டி 58ம் கட்டை பகுதியில் கெப் வாகனமும், முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த கணவர், மனைவி இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்த- மந்தனபுர பகுதியில் வசித்து வரும் டபிள்யு. எம்.சேனககுபண்டார (39 வயது) மற்றும் அவரது மனைவி எச்.எம்.நிலந்தி (34 வயது) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த கெப் வாகனமே மோதியதாகவும், கெப் வாகனத்தில் நான்கு பேர் இருந்ததாகவும் அதில் ஒருவர் வேட்டியுடன் இருந்ததாகவும் அவர் ஒரு அரசியல்வாதியாக இருக்கலாம் எனவும் விபத்தை நேரில் கண்டவர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்