மாடுகளைத் திருடிய மூன்று சந்தேக நபர்கள் கைது

காரைநகர் சிவன் கோவில் மைதானத்தில் மாடுகள் மற்றும் இரண்டு தண்ணீர் தொட்டிகளை திருடிய மூன்று சந்தேக நபர்களை காரைநகர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி இரவு லொறியில் தொட்டிகளையும், 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியினை கொண்ட கோவில் மைதானத்தில் இருந்த 15 மாடுகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்