மது போதையில் 3 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

களுத்துறை வடக்கு, மஹா வஸ்கடுவ கந்த பன்சல வீதியில், ஒருவர் மற்றொருவரை கட்டையால் அடித்துக் படுகொலை செய்துள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த ரமோன் ஜயதிஸ்ஸ (வயது – 67) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்தவரும், சந்தேகநபரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது தாக்குதல் நடாத்திய நபர் தொடர்பிலான இரகசிய காதலை பலர் மத்தியில் குடிபோதையில் வெளிப்படுத்தியதற்காக குறித்த நபரை சந்தேக நபர்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.