
ஜனாதிபதி பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம்
நுவரெலியா நோக்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வெல்லவாய புத்ருவகல பாடசாலை மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில் ஜனாதிபதி சுமார் 50 நிமிடங்கள் காத்திருந்ததன் பின்னர் வாகனத்தின் மூலமாக நுவரெலியாவுக்குச் சென்றார்.
