காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

சூரியவெவ வைத்தியசாலையில் நேற்று புதன் கிழமை காலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலத்தை பரிசோதித்த போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் இரத்தம் கசிந்துள்ளதாகவும் இது சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.