
நகைகளும் ஒரு தொகை பணமும் திருட்டு
-யாழ் நிருபர்-
வட்டுக்கோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் நேற்றைய தினம் புதன் கிழமை வீடொன்றில் 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது.
சித்தங்கேணியில் உள்ள, வயதான இருவர் வசித்து வந்த வீட்டில் அதிகாலை 2மணியளவில் வீட்டிற்குள் புகைக்கூட்டினூடாக உள்நுளைந்த இருவர் இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

