2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கை மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

மும்பையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அத்துடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 9 முறை மோதியுள்ளன.

இதில் இலங்கை அணி 4 போட்டிகளிலும் இந்தியா அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.