
அம்பிட்டிய தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழ் மக்களை அச்சுறுத்துவம் வகையில் பேசிய காணொளி ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழர்கள் மீதான இனவன்முறைகளை தூண்டும் விதமாக பேசிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி தேரருக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கை விசாரித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேரர் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளிகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
