
மோட்டார் திருட்டில் ஈடுப்பட்ட இளைஞன் கைது
யாழ் – வடமராட்சியில் தொடர் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 5 தண்ணீர் மோட்டார்கள் மீட்கப்பட்டுள்ளது.
துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் பல இடங்களில் இடம்பெற்று வந்த தொடர் மோட்டார் திருட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதுடன் 5 தண்ணீர் மோட்டார்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
