விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு பயணித்த குறித்த சிறிய ரக விமானம் ரியோபிரான்சிகோ விமான நிலையத்திற்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்