வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் போது கிடைக்கும் எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட மாட்டாது

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது கிடைக்கப்பெறும் எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்தக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் போது நாடு மீண்டும் ஒரு தடவை அதலபாதாளத்திற்குச் செல்லக் கூடாது என்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்

தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்  என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்