
மட்டக்களப்பில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள விளம்பர பலகைகள்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகின்ற விளம்பர பலகைகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பாலத்திற்கு அருகில் காணப்படும் வெற்று காணி பகுதியில் தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பர பலகைகளை காட்சிபடுத்தியுள்ள நிலையில் ஒரு விளம்பர பலகை உடைந்து கீழே விழும் அபாயத்தில் காணப்படுவதுடன் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பலகையில் காணப்படும் தகரம் விழும் நிலையில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்படுவதாகவும் இவற்றை சரியான முறையில் அகற்றுமாறும் அல்லது சீர் செய்யுமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




