கிணற்றில் வீழ்ந்த காட்டுயானைகள்

பதுளை ரிட்டிகல பகுதிலுள்ள விவசாய கிணறொன்றுக்குள் விழுந்த 4 காட்டுயானைகள் பல மணிநேர முயற்சியின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு தாய் யானைகளும், இரண்டு குட்டிகளுமே இவ்வாறு கிணற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு தேடி ஊருக்குள் பிரவேசித்த யானைகளே இவ்வாறு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்துள்ளதாகவும் ரிட்டிகல, கனேவல்பொல, மொரகொட மற்றும் அலகொல்லேவ வனஜீவராசிகள் காரியாலங்களின் அதிகாரிகள் இணைந்து குறித்த யானைகளை மீட்டு கும்புக்வெவ வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்