
வைத்தியசாலைகளில் சிகிச்சைகள் மட்டுப்படுத்தல்
மருந்துகள் மற்றும் இரசாயன தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சுகாதார அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அமைச்சர் உடனடியாக தீர்வுகாண வேண்டும் எனவும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
