சனி, சுக்கிர கிரக பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு பணமழை

நவம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தீபாவளி பண்டிகை நவம்பரில் கொண்டாடப்படும் என்ற நிலையில், சில கிரகங்களின் மாற்றாமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் இரு கிரகங்களின் மாற்றங்களினால் இந்த 4 ராசிகளுக்கு பண வரத்து அதிகமாக இருக்கும். அது அவர்களின் நிதி நிலைமையை அதிகரிக்கும். பஞ்சாங்கங்களின் கணிப்பின் படி, சுக்கிரனும் சனியும் நவம்பர் மாதம் மிகவும் மங்களகரமான கிரக பெயர்ச்சியுடன் தொடங்குகிறது.

நவம்பர் 3 ஆம் திகதி, சுக்கிரன், சிம்ம ராசியில் இருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைவார். அடுத்த நாளான 4ம் திகதி சனி பகவான் தனது நிலையை மாற்றுகிறார். அவர் தற்போது, தனது சொந்த ராசியான கும்பத்தில் பிற்போக்கு நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். நவம்பர் 4 முதல் நேர் திசையில் பயணத்தை தொடங்கவிருக்கும் சனி பகவான், பலருக்கும் நன்மையான பலன்களையே வழங்குவார்.

சுக்கிரனின் சஞ்சாரமும், சனியின் சஞ்சார மாற்றமும் ராசிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவம்பர் 12ம் திகதி தீபாவளிக்கு முன் இந்த மாற்றங்கள் நடக்கும். இதனால் இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்கும். அவர்கள் எந்தெந்த ராசியினர் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் அருமையாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். சனி மற்றும் சுக்கிரனின் கிரகப் பெயர்ச்சிகளின் தாக்கத்தால், மேஷ ராசியினரின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்:

நவம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கப் போகிறது. இதுவரை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பண வரத்து அதிகரிக்கும். இதனால் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

மிதுனம்:

சனி மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சியால், மிதுன ராசியினருக்கு ஒரு அற்புதமான நேரத்தைக் குறிக்கும். வெற்றி பெற கொஞ்சம் கடின உழைப்பும் தேவைப்படும். ஆனால், எதிர்பாராத பண ஆதாயம் வந்து சேரும். வராக்கடன் என்று நினைத்த பணம் வந்து சேர்வதால் உங்கள் நிதி நிலை மேம்படும்.

மகரம்:

சனி சுக்கிரன் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்களைத் தரும். சனியின் தாக்கத்தால் எதிர்பாராத பண பலன்கள் வந்து சேரும். இது பணம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். மூதாதையர் சொத்துக்களிலும் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் உண்டாகும். மொத்தத்தில் நிம்மதியான மாதம் இது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்