
குடிபோதையில் விபத்து : முன்னாள் பொலிஸ் மா அதிபர் கைது
கொழும்பு மரைன் டிரைவ் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த நபரின் வாகனம் மற்றொரு காருடன் மோதி விபத்து ஏற்பட்டது, பின்னர் சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்கு உள்ளானதாகவும் விபத்து நடந்தபோது அவர் குடிபோதையில் இருந்துள்ளதுடன் விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
