
வெதுப்பகத்தினுள் நுழைந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்
ஹட்டன், கொட்டகலை, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இருவரை தாக்கியுள்ளதோடு, வெதுப்பகத்திற்கு சொந்தமான இரண்டு லொறிகள் மீதும் தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்து பேர் கொண்ட குழுவொன்று ஆயுதங்களுடன் வந்ததாகவும், அதன் பின்னர் ஊழியர்கள் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலை நடத்திவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
