இன்று பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது

பௌர்ணமி தினமான இன்று சனிக்கிழமை பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி, இன்று இரவு 11.31 முதல் 4 மணித்தியாலம் 25 நிமிடங்களுக்கு கிரகணம் தென்படவுள்ளது.

கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் தென்படும் என குறிப்பிடப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்