
காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரும் ஐநா: இலங்கை ஆதரவு
காசாவில் உடனடி போர் நிறுதத்தை கோரி ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவளித்துள்ளது.
மேலும் ஐக்கியநாடுகள் பொதுச்சபை தீர்மானம் காசாவிற்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதற்கு தடையற்ற அனுமதியை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்களை பாதுகாத்தல் சட்ட மற்றும் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்றுதல் என்ற இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்துள்ளன 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
