
உளநலம் தொடர்பிலான செயலமர்வு
-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநலம் தொடர்பான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த செயலமர்வில் வளவாளராக கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவின் வைத்தியர் ஏ.கே.எம்.நஸ்மி கலந்து கொண்டார்.
உளநலப் பாதிப்பு மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் தொடர்பிலும் இதன் போது விழிப்புணர்வூட்டப்பட்டன.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



