
துப்பாக்கி சூடு: 22 பேர் உயிரிழப்பு, 60 பேர் காயம்
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென லூயிஸ்டன் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் உணவகம், மதுபான விடுதி உட்பட மூன்று பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர் ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது புகைப்படம் லூயிஸ்டன் பொலிஸாரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஆயுதம் ஏந்திய ஆபத்தானவர் என பொலிஸார் எச்சரித்துள்ளதுடன் இவர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
