
போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
அம்பாறை மாவட்ட மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரைகளை விநியோகித்துவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை திசாபுர பகுதியை சேர்ந்த 28 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
