நடுவானில் விமானத்தின் என்ஞினை அணைக்க முயன்ற நபர் : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் விமானி அறையில் இருந்து விமானத்தின் இயந்திரங்களை நபரொருவர் நடுவானில் நிறுத்த முயன்றதால்  ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டிற்கு விமானம் அவசரமாகத்  திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது

குறித்த நபர் இதற்கு முன்னர் விமானியாக பணியாற்றியவர் எனவும் இந்த சம்பவம் இடம்பெறும் போது குறித்த நபர் விமானத்தில் பயணியாகவே பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 44 வயதான எமர்சன் என்ற குறித்த நபர்,  83 கொலை முயற்சிகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

​​விமானம் பறக்க தொடங்கி சுமார் 30 நிமிடங்களில் விமானம் சுமார் 31,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது,  குறித்த நபர் விமானி அறைக்குள் நுழைந்து விமானத்தின் என்ஜின்களை அணைக்க முயன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன