சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி விழா
சக்திக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகிறது. அந்தவகையில் கடந்த ஒன்பது நாட்களாகவும் துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்குரிய பூஜைகள் நடைபெற்று இன்றையதினம் விஜயதசமி அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் இந்த விஜயதசமியானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் அனுஷ்டிக்கப்பட்டது. கல்லூரியின் அதிபர் லங்கா பிரதீபன் தலைமையில் இந்த நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பூஜை வழிபாடுகள், ஏடு தொடக்கல் ஆகிய வைபவங்கள் இடம்பெற்றன. பின்னர் தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன.
நவராத்திரி விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள், மாகாண – தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் ஆகியோருக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,
இந்தப் பாடசாலையில் கற்பித்து அதிபராக பதவி உயர்வு பெற்ற ஆறு அதிபர்களும் கௌரவிக்கப்பட்னர். இறுதியாக நன்றி உரையுடன் நிகழ்வானது நிறைவுக்கு வந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்