சி.ஐ.டியினரைத் தாக்கிய நால்வர் கைது

ரம்புக்கனை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரு உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் ஆசிரியத் தொழிலில் ஈடுபடும் பெண்ணொருவரும் 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஸ்மல்பொல பகுதிக்கு சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரு உத்தியோகத்தர்களை தடிகளால் தாக்கி உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்