சிவன் ஆலயத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்.

-மன்னார் நிருபர்-

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஒட்டன் குளம் பகுதியில் அமையப் பெற்றுள்ள நர்மதா நதீஸ்வரர் சிவன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டு கோளுக்கு அமைவாக நேற்றைய தினம் திங்கட் கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம் செய்தார்.

இதன் போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட காணிக் கிளையின் உத்தியோகத்தர்கள் மாகாண நில அளவையாளர் மற்றும் இப்பகுதி கிராம அலுவலகர் என பலரும் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்தனர்.

சந்திப்பில் ஆலய குருக்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

ஆலயத்திற்கு தேவையான பல்வேறு பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாகவும் பிரச்சனைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பிட்ட காலத்துக்குள் இவ்வாலய கட்டுமான பணிகள் மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்று வருகின்றது.

இவ்வாலயத்திற்கு சில தேவைப்பாடுகள் இருந்தமையினால் இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பிரகாரம் இன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக கலந்துரையாடலும் இடம் பெற்றிருந்து.

இவ் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை தவிர ஏனைய பல சமூக நலத்திட்டங்கள் உள்ளடக்கி உள்ளதினால் இவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்