6 புதிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாயம்

6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசம், கண்டி மாவட்டத்தின் தும்பனே பிரதேசம், கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை மற்றும் வரக்காபொல பிரதேசங்கள், குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல மற்றும் ரிதிகம ஆகிய பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்