ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த மனு அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்டது.

நீதியரசர்களான விஜித மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில், இந்த மனு இன்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எந்தவொரு நியாயமான விசாரணையும் இன்றி தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம், சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு கோரி அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்