வாகன விபத்து:3 பேர் காயம்
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் உள்ள வீதியில் டிமோ பட்டா ரக வாகனமொன்று இன்று திங்கட்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈச்சிலம்பற்று -சூரநகர் பகுதியைச் சேர்ந்த பட்டா ரக வாகனத்தில் பயணம் செய்த மூவரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
சந்தைக்கு சென்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனமே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்