மண்மேடு சரிந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு

மாத்தறை – கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயதுடைய உயர்தர மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மண் மேடு சரிந்துள்ளமையால் அப்பகுதிக்கு தற்போது செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவனின் சடலம் தற்போது ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்