பாடசாலைகளுக்கு விடுமுறை
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தெனியாய கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாபா தெரிவித்துள்ளார்.
மேலும் காலநிலையை கருத்திற் கொண்டு மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை மூடுவது தொடர்பில் அந்தந்த வலய கல்வி பணிப்பாளர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்