வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு

கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

19 மற்றும் 25 வயதுடைய இருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று எதிர்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்