
பெற்றோருடன் ஏரியில் குளித்த சிறுவனின் நிலை
அனுராதபுரத்தில் பெற்றோருடன் ஏரியில் குளித்த சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான்.
கேகாலை மொலகொட பி/21 இல் வசித்த நிஷான் பமுதித டிஷால் விஜேசிங்க (வயது – 6) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கேகாலையில் இருந்து அனுராதபுர விகாரை ஒன்றுக்கு நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை சென்ற பின்னர், சிறுவன் தாய் மற்றும் தந்தை, மூன்று பேரும் அனுராதபுரத்தில் உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான்.
