
மீரியபெத்தையில் மீண்டும் மண்சரிவு அபாயம்
பதுளை – கொஸ்லந்தை – மீரியபெத்தையில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் கே.என். பிரியங்கனி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவுறுத்தலுக்கமைய, அபாயம் நிலவும் இரண்டு தொடர் குடியிருப்புகளைச் சேர்ந்த 27 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
