திருமலை விபத்தில் இளைஞன் பலி : ஒருவர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்-

திருமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய இளைஞனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் குச்சவெளி- நாவல்சோலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

விபத்தில் காயமடைந்த மற்றைய நபரை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.