
கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்?
கல்வி அமைச்சுக்கு முன்பாக எதிர்வரும் 24ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சபை தீர்மானித்துள்ளதாக அதன் பிரதி இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாடசாலை செயற்பாடுகளுக்கு போதுமான நிதியை வழங்குதல் உள்ளிட்ட சில காரணங்களை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
30 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
