கற்பிட்டி விபத்து: மகனையடுத்து தந்தைக்கு நேர்ந்த சோகம்

புத்தளம், கற்பிட்டி – நுரைச்சோலை வீதியில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி – தலவில பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய நிசாந்த (வயது – 36) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி பகுதியில் மகேந்திரா ரக லொறியொன்றும், எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததையடுத்து தந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.