
காணாமல் போன மாணவர்கள் மீட்பு
நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர், காணாமல் போன நிலையில் குருநாகல் புத்தளம் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்த போது அதிபரால் கண்டிக்கப்பட்டதையடுத்து அந்த மாணவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே குறித்த மாணவர்கள் இருவரும் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரண்டு மாணவர்களும் காணமல் போனபை பற்றி, ஒரு மாணவனின் தாயும் மற்றைய மாணவனின் தந்தையும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு மாரவில தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்தமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
