டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா பாராளுமன்றத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்றத்தில் அறிவித்ததையடுத்து அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.