
மட்டக்களப்பில் மாணவர்களை சிரமங்களுக்குள்ளாக்கும் நிலை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ள நிலையில் மாணவர்கள் பாடசாலை சமூகத்தினரால் சிரமத்திற்குள்ளாகுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு தவணை பரீட்சை நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் மாணவர்கள் பரீட்சைகளில் தோற்றுவதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு செல்வதற்கு வாகன போக்குவரத்து இன்மையினால் மிகுந்த சிரமப்பட்டு சென்றதுடன் நகர் பகுதிகளில் பாடசாலைக்கு சென்ற மாணவர்களை வீடுகளுக்கு திருப்பியனுப்பியதாகவும் பின்னர் காலை 9.30 மணியளவில் மீண்டும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்குமாறு தெரிவித்ததாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் நிர்வாக முடக்கல் காரணமாக போக்குவரத்த சிரமங்கள் காணப்படுவதுடன் பெற்றோர் இருவருமே பணிக்கு செல்லும் வீடுகளில் இந்த நிலைமையை எதிர் கொள்வதில் சிரமப்படுவதாகவும் இவ்வாறான பாடசாலைகளின் அலட்சியங்களை நினைத்து கவலை கொள்வதுடன் இந்த நிலை நகர் பகுதிகளில் மாத்திரம் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
