
மதுபோதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதி கைது
-மன்னார் நிருபர்-
மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போரூந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதி நேற்று புதன்கிழமை மாலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்தின் சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து பொலிஸாரால் மன்னார் வைத்தியசாலை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சாரதியை இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த சாரதி யை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
