மீன் வாகனம் மோதி விபத்து- பலத்த காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில் அனுமதி

-மன்னார் நிருபர்-

மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் மீன் ஏற்றி வந்த மகேந்திரா ரக வாகனம் இன்று வியாழக்கிழமை மாலை வீதியோர தடையில் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் தள்ளாடி ஊடாக பேசாலைக்கு பல ஆயிரக்கணக்கான கிலோ மீன் மற்றும் திருக்கை மீனுடன் பயணித்த மகேந்திரா ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீதியோர தடையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.