
முச்சக்கர வண்டிகளை திருடி விற்று பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபர் கைது
கொழும்பில் முச்சக்கர வண்டிகளை திருடி குறைந்த விலையில் விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பெண்களுடன் செலவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முச்சக்கர வண்டிகளை திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் குறைந்த விலைக்கு முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்ய கிரிபத்கொடைக்கு ஒருவர் வந்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டாரவுக்கு தகவல் கிடைத்ததனையடுத்து, சந்தேக நபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது சந்தேக நபர் கடந்த 8 மாதங்களில் ஒரு கோடி ரூபா பெறுமதியான 21 முச்சக்கரவண்டிகளைத் திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
