1 1/2 வயது பேர குழந்தைக்கு தாத்தாவால் நிகழ்ந்த கொடுமை

-பதுளை நிருபர்-

லுணுகலை சோலன்ஸ் தோட்டத்தில் 63 வயதுடைய நபர் ஒருவர் தனது மகனின் 1 1ஷ2 வயதுடைய மகளை வன்மையான பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குழந்தையின் தாயாரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த குழந்தை லுணுகலை தெய்கல்பெத்த கொடல்பெத்த பகுதியில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் சோலன்ஸ் பகுதியில் இருந்து குறித்த குழந்தையின் அப்பம்மா கொடல்பெத்த பகுதிக்கு சென்று குழந்தையை சோலன்ஸ் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் குறித்த குழந்தையை தனது கணவரிடம் விட்டு விட்டு கடமை நிமித்தம் அவர் வெளியில் சென்றுள்ளார்.

இந்நிலையில் குழந்தையின் தகப்பன் குழந்தையை தனது வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக குறித்த வீட்டுக்கு சென்ற வேளை திடீரென வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே எட்டி பார்த்த போது தனது ஒன்றறை வயது மகளை தனது தகப்பன் வன்மையான பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்வதை கண்டுள்ளதாக லுணுகலை பொலிஸ் நிலையத்தில் குறித்த குழந்தையின் தாயாரினால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் தனது மகனால் தான் தாக்கப்பட்டதாக கூறி குறித்த நபர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.