
மண்சரிவு அபாயமுள்ள இடங்கள்: வெளியேற மறுக்கும் மக்கள்
கொஸ்லந்தை – மீரியபெத்தையில் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு ஏற்படக்கூடிய அபாய இடங்களில் வசிப்பவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன் படி குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த போதிலும் சிலர் இன்னும் அபாயம் ஏற்படக்கூடிய இடங்களில் இருந்து வெளியேற மறுத்துள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் பண்டாரவளை நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.
இதனை ஆராய்ந்த நீதவான், உடனடியாக குறித்த பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றி அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அறிவுறுத்தியுள்யதுடன் அதன் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
