சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மாதம் 50 ஆயிரத்து 395 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
12,261 இந்திய சுற்றுலாப்பயணிகளும், 4,554 ரஷ்ய சுற்றுலாப்பயணிகளும், 3,269 சீன சுற்றுலாப்பயணிகளும், 3,180 ஜேர்மன் சுற்றுலாப்பயணிகளும் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்