திருமண நிகழ்வில் ஏற்பட்ட வாய்தர்க்கம்: கலந்து கொண்டவரின் பரிதாபம்

மல்வத்துஹிரிபிட்டிய விலிம்புல பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றின் போது நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

விலிம்புலவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மாகம்மனகே சிறிமேவன் (வயது – 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விலிம்புலவில் உள்ள வீடொன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது உயிரிழந்தவருக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் மோதலாக மாறியதில் குறித்த தாக்குதல் இடம்பெற்றதுடன் தாக்குதலில் படுகாயமடைந்து ராதாவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்