சம்பா அரிசி மற்றும் முட்டையை விற்ற வர்த்தகர்களுக்கு அபராதம்

சம்பா அரிசி மற்றும் முட்டையை கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து பருத்துத்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நெல்லியடி பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை மற்றும் சம்பா அரிசி விற்பனை செய்த இரண்டு வர்த்தகர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்