நசீர் அஹமட்டுக்குப் பதிலாக அலி ஜாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்

நசீர் அஹமட் தனது பதவியை இழந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா செய்யத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா செய்யாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு 2353 /52 வர்த்தமானி அறிவித்தலை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் சட்டரீதியாக செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்ததையடுத்து நசீர் அஹமட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.